வாசகங்கள்
16 ஆகஸ்ட், 2027
Ordinary Weekday/ Stephen of Hungary, Married Man
Stephen of Hungary, Married Man
First Reading
நீதித் தலைவர்கள் 2: 11-19
11இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.
12அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
13அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.
14இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருக்க எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால், அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று.
15ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.
16ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர்.
17ஆயினும், அவர்கள் தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை; ஏனெனில், அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர்.
18ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில், துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
19ஆனால், அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 106: 34-35, 36-37, 39-40, 43ab and 44
34⁽ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக,␢ மக்களினங்களை அவர்கள்␢ அழிக்கவில்லை.⁾
35⁽வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,␢ அவர்களின் வழக்கங்களைக்␢ கற்றுக்கொண்டனர்;⁾
36⁽அவர்களின் தெய்வச் சிலைகளைத்␢ தொழுதனர்; அவையே␢ அவர்களுக்குக் கண்ணிகளாயின.⁾
37⁽அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்␢ பேய்களுக்குப் பலியிட்டனர்;⁾
39⁽அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக்␢ கறைப்படுத்திக் கொண்டனர்;␢ தங்கள் செயல்கள் மூலம்␢ வேசித்தனம் செய்தனர்.⁾
40⁽எனவே, ஆண்டவரின் சினம்␢ அவர்தம் மக்களுக்கெதிராகப்␢ பற்றியெரிந்தது;␢ தமது உரிமைச் சொத்தை␢ அவர் அருவருத்தார்.⁾
43⁽பன்முறை அவர்␢ அவர்களை விடுவித்தார்;␢ அவர்களோ திட்டமிட்டே␢ அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்;␢ தங்கள் தீச்செயல்களினால்␢ அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.⁾
44⁽எனினும் அவர் அவர்களது␢ மன்றாட்டுக்குச் செவிசாய்த்து,␢ அவர்களது துன்பத்தைக் கண்டு␢ மனமிரங்கினார்.⁾
Alleluia
மத்தேயு 5: 3
3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾
Gospel
மத்தேயு 19: 16-22
16அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
17இயேசு அவரிடம், “நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.
18அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;
19தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.
20அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார்.
21அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.
22அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.