ஆகஸ்ட் 2027

ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
இன்றுக்கு

வாசகங்கள்

31 ஆகஸ்ட், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

1 தெசலோனிக்கர் 5: 1-6, 9-11

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 27: 1, 4, 13-14

1⁽ஆண்டவரே என் ஒளி;␢ அவரே என் மீட்பு;␢ யாருக்கு நான் அஞ்சவேண்டும்?␢ ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;␢ யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?⁾ 4⁽நான் ஆண்டவரிடம்␢ ஒரு விண்ணப்பம் செய்தேன்;␢ அதையே நான் நாடித் தேடுவேன்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ என் வாழ்நாள் எல்லாம்␢ நான் குடியிருக்க வேண்டும்,␢ ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; § அவரது கோவிலில் அவரது␢ திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.⁾ 13⁽வாழ்வோரின் நாட்டினிலே␢ ஆண்டவரின் நலன்களைக்␢ காண்பேன் என்று␢ நான் இன்னும் நம்புகின்றேன்.⁾ 14⁽நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;␢ மன உறுதிகொள்;␢ உன் உள்ளம் வலிமை பெறட்டும்;␢ ஆண்டவருக்காகக் காத்திரு.⁾
Alleluia

லூக்கா 7: 16

16அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
Gospel

லூக்கா 4: 31-37

31பின்பு, இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். 32அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். 33தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். 34அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது. 35“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று. 36எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். 37அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.