வாசகங்கள்
20 ஆகஸ்ட், 2027
Bernard, Abbot, Doctor Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
ரூத்து 1: 1, 3-6, 14b-16, 22
1நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாபு நாட்டிற்கு சென்றார்.
3அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.
4அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின.
5பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.
6நகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார்.
14அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.
15ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ” என்றார்.
16அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.
22இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத் திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 146: 5-6ab, 6c-7, 8-9a, 9bc-10
5⁽யாக்கோபின் இறைவனைத்␢ தம் துணையாகக் கொண்டிருப்போர்␢ பேறுபெற்றோர்;␢ தம் கடவுளாகிய ஆண்டவரையே␢ நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.⁾
6⁽அவரே விண்ணையும் மண்ணையும்␢ கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்␢ உருவாக்கியவர்;␢ என்றென்றும் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பவரும் அவரே!⁾
7⁽ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான␢ நீதியை நிலைநாட்டுகின்றார்;␢ பசித்திருப்போர்க்கு␢ உணவளிக்கின்றார்;␢ சிறைப்பட்டோர்க்கு␢ விடுதலை அளிக்கின்றார்.⁾
8⁽ஆண்டவர் பார்வையற்றோரின்␢ கண்களைத் திறக்கின்றார்;␢ தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;␢ நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.⁾
9⁽ஆண்டவர் அயல் நாட்டினரைப்␢ பாதுகாக்கின்றார்;␢ அனாதைப் பிள்ளைகளையும்␢ கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;␢ ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்␢ கவிழ்த்துவிடுகின்றார்.⁾
10⁽சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,␢ எல்லாத் தலைமுறைகளுக்கும்␢ ஆட்சி செய்வார். அல்லேலூயா!⁾
Alleluia
திருப்பாடல்கள் 25: 4b, 5a
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
Gospel
மத்தேயு 22: 34-40
34இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.
35❮35-36❯அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
36Same as above
37அவர், ⁽“ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ ⁾
38இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
39⁽‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’⁾ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
40திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.