வாசகங்கள்
26 ஆகஸ்ட், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
1 தெசலோனிக்கர் 3: 7-13
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 90: 3-5a, 12-13, 14 and 17
3⁽மனிதரைப் புழுதிக்குத்␢ திரும்பிடச் செய்கின்றீர்;␢ ‘மானிடரே! மீண்டும்␢ புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.⁾
4⁽ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,␢ உம் பார்வையில்␢ கடந்துபோன நேற்றைய நாள் போலவும்␢ இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.⁾
5⁽வெள்ளமென மானிடரை␢ வாரிக்கொண்டு செல்கின்றீர்;␢ அவர்கள் வைகறையில் முளைத்தெழும்␢ புல்லுக்கு ஒப்பாவர்;⁾
12⁽எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க␢ எங்களுக்குக் கற்பியும்;␢ அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்␢ பெற்றிடுவோம்.⁾
13⁽ஆண்டவரே, திரும்பி வாரும்;␢ எத்துணைக் காலம் இந்நிலை?␢ உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.⁾
14⁽காலைதோறும் உமது பேரன்பால்␢ எங்களுக்கு நிறைவளியும்;␢ அப்பொழுது வாழ்நாளெல்லாம்␢ நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.⁾
17⁽எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்␢ எம்மீது தங்குவதாக!␢ நாங்கள் செய்பவற்றில்␢ எங்களுக்கு வெற்றி தாரும்!␢ ஆம், நாங்கள் செய்பவற்றில்␢ வெற்றியருளும்!⁾
Alleluia
மத்தேயு 24: 42a, 44
42விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
44எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
Gospel
மத்தேயு 24: 42-51
42விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
43இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
44எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
45“தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர்அமர்த்தியநம்பிக்கைக்குஉரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்?
46தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.
47அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
48அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,
49தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.
50அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.
51அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”