வாசகங்கள்
1 அக்டோபர், 2027
Thérèse of Lisieux, Virgin, Religious, Doctor Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
பாரூக்கு (எரேமியாவின் மடல்) 1: 15-22
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 79: 1b-2, 3-5, 8, 9
1⁽கடவுளே, வேற்று நாட்டினர்␢ உமது உரிமைச் சொத்தினுள்␢ புகுந்துள்ளனர்;␢ உமது திருக்கோவிலைத்␢ தீட்டுப்படுத்தியுள்ளனர்;␢ எருசலேமைப் பாழடையச் செய்தனர்.⁾
2⁽உம் ஊழியரின் சடலங்களை␢ வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும்␢ உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக்␢ காட்டு விலங்குகளுக்கு உணவாகவும்␢ அவர்கள் அளித்துள்ளார்கள்;⁾
3⁽அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென␢ எருசலேமைச் சுற்றிலும்␢ அள்ளி இறைத்தார்கள்;␢ அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.⁾
4⁽எங்களை அடுத்து வாழ்வோரின்␢ பழிச்சொல்லுக்கு இலக்கானோம்;␢ எங்களைச் சூழ்ந்துள்ளோரின்␢ நகைப்புக்கும் ஏளனத்திற்கும் § ஆளாகிவிட்டோம்.⁾
5⁽ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம்␢ நீர் சினம் கொண்டிருப்பீர்?␢ என்றென்றுமா?␢ உமது வெஞ்சினம்␢ நெருப்பாக எரியுமோ?⁾
8⁽எம் மூதாதையரின் குற்றங்களை␢ எம்மீது சுமத்தாதேயும்!␢ உம் இரக்கம் எமக்கு␢ விரைவில் கிடைப்பதாக!␢ நாங்கள் மிகவும்␢ தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.⁾
9⁽எங்கள் மீட்பராகிய கடவுளே!␢ உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு␢ எங்களுக்கு உதவி செய்தருளும்;␢ உமது பெயரை முன்னிட்டு␢ எங்களை விடுவித்தருளும்;␢ எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 95: 8
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel
லூக்கா 10: 13-16
13“கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.
14எனினும், தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.
15கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்.⒫
16“உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”