அக்டோபர் 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

30 அக்டோபர், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

உரோமையர் 11: 1-2a, 11-12, 25-29

1அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா? ஒருபோதும் இல்லை. நானும் ஓர் இஸ்ரயேலன், ஆபிரகாமின் வழிமரபினன், பென்யமின் குலத்தினன். 2தாம் முன்பே தேர்ந்து கொண்ட மக்களைக் கடவுள் தள்ளி விடவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகக் கடவுளிடம் எலியா முறையீடு செய்தது பற்றிய மறைநூல் பகுதி உங்களுக்குத் தெரியாதா?⒫ 11அப்படியானால், அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா? ஒருபோதும் இல்லை. அவர்கள் தவறு செய்ததால் யூதரல்லாதாருக்கு மீட்புக் கிடைத்தது. அவர்களிடம் பொறாமையைத் தூண்டிவிடவே இவ்வாறு ஆயிற்று. 12அவர்கள் தவறியதால் உலகம் அருள்வளமுற்றது; அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்; அப்படியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?⒫ 25சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர். 26❮26-27❯பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்; ⁽“சீயோனிலிருந்து அவர்␢ மீட்பராக வருவார்;␢ யாக்கோபில் தீயதனைத்தையும்␢ போக்கிடுவார்.␢ நான் அவர்களுடைய பாவங்களை␢ அகற்றிவிடுவேன்;␢ அவர்களுடன் நான் செய்து கொள்ளும்␢ உடன்படிக்கை இதுவே”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! 27Same as above 28நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்; அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள். 29ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 94: 12-13a, 14-15, 17-18

12⁽ஆண்டவரே! நீர் கண்டித்து␢ உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும்␢ மனிதர் பேறுபெற்றோர்;⁾ 13⁽அவர்களின் துன்ப நாள்களில்␢ அவர்களுக்கு அமைதி அளிப்பீர்.␢ பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.⁾ 14⁽ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;␢ தம் உரிமைச் சொத்தாம்␢ அவர்களைக் கைவிடார்.⁾ 15⁽தீர்ப்பு வழங்கும் முறையில்␢ மீண்டும் நீதி நிலவும்;␢ நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.⁾ 17⁽ஆண்டவர் எனக்குத்␢ துணை நிற்காதிருந்தால்,␢ என் உயிர் விரைவில்␢ மௌன உலகிற்குச் சென்றிருக்கும்!⁾ 18⁽‘என் அடி சறுக்குகின்றது’ என்று␢ நான் சொன்னபோது,␢ ஆண்டவரே! உமது பேரன்பு␢ என்னைத் தாங்கிற்று.⁾
Alleluia

மத்தேயு 11: 29ab

29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
Gospel

லூக்கா 14: 1, 7-11

1ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். 7விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: 8“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். 9உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். 10நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். 11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”⒫