வாசகங்கள்
8 அக்டோபர், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
யோவேல் 1: 13-15; 2: 1-2
13⁽குருக்களே,␢ சாக்கு உடை உடுத்திக்கொண்டு § தேம்பி அழுங்கள்;␢ பலிபீடத்தில் பணிபுரிவோரே!␢ அலறிப் புலம்புங்கள்;␢ என் கடவுளின் ஊழியர்களே,␢ சாக்கு உடை அணிந்தவர்களாய் § இரவைக் கழியுங்கள்;␢ ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில்␢ தானியப் படையலும் நீர்மப் படையலும் § இல்லாமற் போயின.⁾
14⁽உண்ணா நோன்புக்கென␢ நாள் குறியுங்கள்;␢ வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்;␢ ஊர்ப் பெரியோரையும்␢ நாட்டில் குடியிருப்போர் அனைவரையும்␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்␢ இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்;␢ ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.⁾
15⁽மிகக் கொடிய நாள் அந்த நாள்!␢ ஆண்டவரின் நாள் §அண்மையில் உள்ளது;␢ எல்லாம் வல்லவர்␢ அழிவை அனுப்பும் நாளாக அது வரும்;⁾
1⁽சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்;␢ என்னுடைய திரு மலை␢ மேலிருந்து கூக்குரலிடுங்கள்;␢ நாட்டில் குடியிருப்பவர்கள்␢ அனைவரும் நடுங்குவார்களாக!␢ ஏனெனில், ஆண்டவரின் நாள்␢ வருகின்றது, ஆம்;␢ அது வந்து விட்டது.⁾
2⁽அதுவோ இருளும் காரிருளும்␢ கவிந்த நாள்;␢ மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்;␢ விடியற்கால ஒளி␢ மலைகள்மேல் பரவுவதுபோல்␢ ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின்␢ பெருங்கூட்டம் வருகின்றது;␢ இதுபோன்று என்றுமே␢ நிகழ்ந்ததில்லை;␢ இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும்␢ நிகழப்போவதுமில்லை.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 9: 2-3, 6 and 16, 8-9
2⁽உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;␢ உன்னதரே, உமது பெயரைப்␢ போற்றிப் பாடுவேன்.⁾
3⁽என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;␢ உமது முன்னிலையில்␢ இடறிவிழுந்து அழிவார்கள்.⁾
6⁽எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்␢ தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.⁾
16⁽ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்␢ தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;␢ பொல்லார் செய்த செயலில்␢ அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)⁾
8⁽உலகிற்கு அவர்␢ நீதியான தீர்ப்பு வழங்குவார்;␢ மக்களினத்தார்க்கு␢ நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.⁾
9⁽ஒடுக்கப்படுவோருக்கு␢ ஆண்டவரே அடைக்கலம்;␢ நெருக்கடியான வேளைகளில்␢ புகலிடம் அவரே.⁾
Alleluia
யோவான் 12: 31b-32
31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
32நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.
Gospel
லூக்கா 11: 15-26
15அவர்களுள் சிலர், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
16வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.⒫
17இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.
18சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.
19நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
20நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
21வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.
22அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.⒫
23என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.”⒫
24“ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும்.
25திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும்.
26மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”