அக்டோபர் 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

29 அக்டோபர், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

உரோமையர் 9: 1-5

1கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. 2உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. 3என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். 4அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. 5குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 147: 12-13, 14-15, 19-20

12⁽எருசலேமே!␢ ஆண்டவரைப் போற்றுவாயாக!␢ சீயோனே!␢ உன் கடவுளைப் புகழ்வாயாக!⁾ 13⁽அவர் உன் வாயில்களின் தாழ்களை␢ வலுப்படுத்துகின்றார்;␢ உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு␢ ஆசி வழங்குகின்றார்.⁾ 14⁽அவர் உன் எல்லைப்புறங்களில்␢ அமைதி நிலவச் செய்கின்றார்;␢ உயர்தரக் கோதுமை வழங்கி␢ உன்னை நிறைவடையச் செய்கின்றார்.⁾ 15⁽அவர் தமது கட்டளையை␢ உலகினுள் அனுப்புகின்றார்;␢ அவரது வாக்கு␢ மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.⁾ 19⁽யாக்கோபுக்குத் தமது வாக்கையும்␢ இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்␢ நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.⁾ 20⁽அவர் வேறெந்த இனத்துக்கும்␢ இப்படிச் செய்யவில்லை;␢ அவருடைய நீதிநெறிகள்␢ அவர்களுக்குத் தெரியாது;␢ அல்லேலூயா!⁾
Alleluia

யோவான் 10: 27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

லூக்கா 14: 1-6

1ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். 2அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். 3இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். 4அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். 5பிறகு, அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். 6அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.