வாசகங்கள்
22 அக்டோபர், 2027
Ordinary Weekday/ John Paul II, Pope
John Paul II, Pope
First Reading
உரோமையர் 7: 18-25a
18ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை.
19நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.⒫
21நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்,
22நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன்.
23ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.
24அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
25நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி! சுருங்கச் சொல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் நானே என் ஊனியல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறேன்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119: 66, 68, 76, 77, 93, 94
66⁽நன் மதியையும் அறிவாற்றலையும்␢ எனக்குப் புகட்டும்;␢ ஏனெனில், உம் கட்டளைகள் மீது␢ நம்பிக்கை வைக்கின்றேன்.⁾
68⁽நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.⁾
76⁽எனக்கு ஆறுதலளிக்குமாறு␢ உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;␢ உம் ஊழியனுக்கு␢ வாக்குறுதி அளித்தீர் அன்றோ!⁾
77⁽நான் பிழைத்திருக்கும்படி␢ உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்;␢ ஏனெனில், உமது திருச்சட்டமே␢ எனக்கு இன்பம்.⁾
93⁽உம் நியமங்களை நான்␢ எந்நாளும் மறவேன்;␢ ஏனெனில், அவற்றைக்கொண்டு␢ என்னைப் பிழைக்க வைத்தீர்.⁾
94⁽உமக்கே நான் உரிமை;␢ என்னைக் காத்தருளும்;␢ ஏனெனில், உம் நியமங்களையே␢ நான் நாடியுள்ளேன்.⁾
Alleluia
மத்தேயு 11: 25
25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel
லூக்கா 12: 54-59
54இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது.
55தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.
56வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
57“நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
58நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
59கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”