அக்டோபர் 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

16 அக்டோபர், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Hedwig, Religious/ Margaret Mary Alacoque, Virgin

Margaret Mary Alacoque, Virgin
First Reading

உரோமையர் 4: 13, 16-18

13உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. 16ஆகவே, கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு, வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் — திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் — உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. 17ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். 18“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே, அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 105: 6-7, 8-9, 42-43

6⁽அவரின் ஊழியராம்␢ ஆபிரகாமின் வழிமரபே!␢ அவர் தேர்ந்துகொண்ட␢ யாக்கோபின் பிள்ளைகளே!⁾ 7⁽அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!␢ அவரின் நீதித்தீர்ப்புகள்␢ உலகம் அனைத்திற்கும் உரியன.⁾ 8⁽அவர் தமது உடன்படிக்கையை␢ என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;␢ ஆயிரம் தலைமுறைக்கென␢ தாம் அளித்த வாக்குறுதியை␢ நினைவுகூர்கின்றார்.⁾ 9⁽ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட␢ உடன்படிக்கையையும்␢ ஈசாக்குக்குத் தாம்␢ ஆணையிட்டுக் கூறியதையும்␢ அவர் நினைவில் கொண்டுள்ளார்.⁾ 42⁽ஏனெனில், தம் அடியார்␢ ஆபிரகாமுக்கு அளித்த␢ தமது தூய வாக்குறுதியை␢ அவர் நினைவுகூர்ந்தார்.⁾ 43⁽அவர் தம் மக்களை␢ மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;␢ அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை␢ ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.⁾
Alleluia

யோவான் 15: 26b, 27a

26தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். 27நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.
Gospel

லூக்கா 12: 8-12

8“நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். 9மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். 10மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். 11தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். 12ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.