அக்டோபர் 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

25 அக்டோபர், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

உரோமையர் 8: 12-17

12ஆகையால், சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. 13நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். 14கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். 16நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். 17நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 68: 2 and 4, 6-7ab, 20-21

2⁽புகை அடித்துச் செல்லப்படுவதுபோல␢ அடித்துச் செல்லப்படுவர்;␢ நெருப்புமுன் மெழுகு␢ உருகுவது போலக்␢ கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.⁾ 4⁽கடவுளைப் புகழ்ந்து பாடி␢ அவரது பெயரை போற்றுங்கள்;␢ மேகங்கள்மீது வருகிறவரை␢ வாழ்த்திப் பாடுங்கள்;␢ ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்;␢ அவர்முன் களிகூருங்கள்.⁾ 6⁽தனித்திருப்போர்க்குக் கடவுள்␢ உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;␢ சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு␢ அழைத்துச் செல்கின்றார்; ஆனால்,␢ அவருக்கு எதிராகக் கிளம்புவோர்␢ வறண்ட நிலத்தில் வாழ்வர்.⁾ 7⁽கடவுளே! நீர் உம்முடைய␢ மக்கள் முன்சென்று␢ பாலைவெளியில் நடைபோட்டுச்␢ செல்கையில், (சேலா)⁾ 20⁽நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்;␢ நம் தலைவராகிய ஆண்டவர்தாம்␢ இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.⁾ 21⁽அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்;␢ தம் தீய வழிகளில்␢ துணிந்து நடப்போரின்␢ மணிமுடியை நொறுக்குவார்.⁾
Alleluia

யோவான் 17: 17b, 17a

17உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
Gospel

லூக்கா 13: 10-17

10ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். 11பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். 12இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, 13தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.⒫ 14இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்” என்றார். 15ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ? 16பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார். 17அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.