அக்டோபர் 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

12 அக்டோபர், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

உரோமையர் 1: 16-25

16நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் — அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் — அந்த மீட்பு உண்டு. 17ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. 18இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். 19கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். 20ஏனெனில், கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் — அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் — உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 22தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.⒫ 24ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். 25அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 19: 2-3, 4-5

2⁽ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு␢ அச்செய்தியை அறிவிக்கின்றது;␢ ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு␢ அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.⁾ 3⁽அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;␢ அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.⁾ 4⁽ஆயினும், அவற்றின் அறிக்கை␢ உலகெங்கும் சென்றடைகின்றது; § அவை கூறும் செய்தி␢ உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,␢ இறைவன் அங்கே கதிரவனுக்கு␢ ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.⁾ 5⁽மணவறையிலிருந்து புறப்படும்␢ மணமகளைப் போல அது வருகின்றது;␢ பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு␢ அது தன் பாதையில் ஓடுகின்றது.⁾
Alleluia

எபிரேயர் 4: 12

12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel

லூக்கா 11: 37-41

37இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 38உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். 39ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. 40அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! 41உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.⒫