வாசகங்கள்
26 அக்டோபர், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
உரோமையர் 8: 18-25
18இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.
19இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
20ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும், அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.
21அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.
22இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
23படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
24நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?
25நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 126: 1b-2ab, 2cd-3, 4-5, 6
1⁽சீயோனின் அடிமை நிலையை § ஆண்டவர் மாற்றினபோது,␢ நாம் ஏதோ கனவு § கண்டவர் போல இருந்தோம்.⁾
2⁽அப்பொழுது, நமது முகத்தில்␢ மகிழ்ச்சி காணப்பட்டது.␢ நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;␢ ‟ஆண்டவர் அவர்களுக்கு␢ மாபெரும் செயல் புரிந்தார்” என்று␢ பிற இனத்தார் தங்களுக்குள்␢ பேசிக்கொண்டனர்.⁾
3⁽ஆண்டவர் நமக்கு␢ மாபெரும் செயல் புரிந்துள்ளார்;␢ அதனால் நாம்␢ பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.⁾
4⁽ஆண்டவரே!␢ தென்னாட்டின் வறண்ட ஓடையை␢ நீரோடையாக␢ வான்மழை மாற்றுவதுபோல,␢ எங்கள் அடிமை நிலையை␢ மாற்றியருளும்.⁾
5⁽கண்ணீரோடு விதைப்பவர்கள்␢ அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.⁾
6⁽விதை எடுத்துச் செல்லும்போது –␢ செல்லும்போது – அழுகையோடு␢ செல்கின்றார்கள்;␢ அரிகளைச் சுமந்து வரும்போது –␢ வரும்போது – ␢ அக்களிப்போடு வருவார்கள்.⁾
Alleluia
மத்தேயு 11: 25
25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel
லூக்கா 13: 18-21
18பின்பு இயேசு, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
19அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.⒫
20மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்?
21அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.