வாசகங்கள்
19 அக்டோபர், 2027
Isaac Jogues and John De Brébeuf, Priests, Religious, Missionaries, Martyrs, and Companions, Martyrs Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
உரோமையர் 5: 12, 15b, 17-19, 20b-21
12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும்* இறந்தனர். ஆனால், கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
17மேலும், ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?⒫
18ஆகவே, ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.
19ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர்* பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர்* கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.⒫
20குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது; ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.
21இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 40: 7-8a, 8b-9, 10, 17
7⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾
8⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾
9⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾
10⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾
17⁽நானோ ஏழை; எளியவன்;␢ என் தலைவர்␢ என்மீது அக்கறை கொண்டுள்ளார்;␢ நீரே என் துணைவர், என் மீட்பர்!␢ என் கடவுளே, எனக்குத்␢ துணை செய்ய விரைந்து வாரும்.⁾
Alleluia
லூக்கா 21: 36
36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
Gospel
லூக்கா 12: 35-38
35“உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.
36திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.
37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
38தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.