வாசகங்கள்
3 அக்டோபர், 2027
Twenty-Seventh Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 2: 18-24
18பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.
19ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.
20கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
21ஆகவே, ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
22ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.
23⁽அப்பொழுது மனிதன்,␢ “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும்␢ சதையின் சதையும் ஆனவள்;␢ ஆணிடமிருந்து* எடுக்கப்பட்டதால்,␢ இவள் பெண்** என்று␢ அழைக்கப்படுவாள்” என்றான்.⁾
24இதனால், கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 128: 1-2, 3, 4-5, 6
1⁽ஆண்டவருக்கு அஞ்சி␢ அவர் வழிகளில் நடப்போர்␢ பேறுபெற்றோர்!⁾
2⁽உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!␢ நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!⁾
3⁽உம் இல்லத்தில் உம் துணைவியார்␢ கனிதரும் திராட்சைக் கொடிபோல்␢ இருப்பார்;␢ உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்␢ ஒலிவக் கன்றுகளைப் போல்␢ உம்மைச் சூழ்ந்திருப்பர்.⁾
4⁽ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்␢ இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.⁾
5⁽ஆண்டவர் சீயோனிலிருந்து␢ உமக்கு ஆசி வழங்குவாராக!␢ உம் வாழ் நாளெல்லாம் நீர்␢ எருசலேமின் நல்வாழ்வைக்␢ காணும்படி செய்வாராக!⁾
6⁽நீர் உம் பிள்ளைகளின்␢ பிள்ளைகளைக் காண்பீராக!␢ இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!⁾
Second Reading
எபிரேயர் 2: 9-11
9நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
10கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.⒫
11தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.
Alleluia
1 யோவான் 4: 12
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மாற்கு 10: 2-16
2பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
3அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார்.
4அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
5அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
6படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,⁽‘ஆணும் பெண்ணுமாக␢ அவர்களைப் படைத்தார்.⁾
7⁽இதனால் கணவன்␢ தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத்␢ தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.⁾
8⁽இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’⁾ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
9எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
10பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
11இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.
12தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
13சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
14இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
15இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
16பிறகு, அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.