அக்டோபர் 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

13 அக்டோபர், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

உரோமையர் 2: 1-11

1ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில், பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே! 2இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும். 3இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்து வருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா? 4அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? 5உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை; ஆகையால், கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள். 6ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார். 7மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். 8ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். 9முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். 10அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். 11ஏனெனில், கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 62: 2-3, 6-7, 9

2⁽உண்மையாகவே என் கற்பாறையும்␢ மீட்பும் அவரே;␢ என் கோட்டையும் அவரே;␢ எனவே நான் சிறிதும் அசைவுறேன்.⁾ 3⁽ஒருவரைக் கொல்லவேண்டுமென்று␢ நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம்␢ வெறியுடன் தாக்குவீர்?␢ நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும்␢ சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர்.⁾ 6⁽உண்மையாகவே,␢ என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே.␢ எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.⁾ 7⁽என் மீட்பும் மேன்மையும்␢ கடவுளிடமே இருக்கின்றன;␢ என் வலிமைமிகு கற்பாறையும்␢ புகலிடமும் கடவுளே.⁾ 9⁽மெய்யாகவே, மானிடர்␢ நீர்க்குமிழி போன்றவர்;␢ மனிதர் வெறும் மாயை;␢ துலாவில் வைத்து நிறுத்தால்,␢ அவர்கள் மேலே போகின்றார்கள்;␢ எல்லாரையும் சேர்த்தாலும்␢ நீர்க்குமிழியை விட␢ எடை குறைகின்றார்கள்.⁾
Alleluia

யோவான் 10: 27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

லூக்கா 11: 42-46

42“ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால், அவற்றையும் விட்டு விடலாகாது.”⒫ 43“ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.”⒫ 44“ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.”⒫ 45திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்” என்றார். 46அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால், நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”⒫