வாசகங்கள்
4 ஜூன், 2028
Pentecost Solemnity
Day
First Reading
திருத்தூதர் பணிகள் 2: 1-11
1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
3மேலும், நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.
4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.
5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.
6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர்.
7எல்லோரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என வியந்தனர்.
9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,
10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,
11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!” என்றனர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 104: 1, 24, 29-30, 31, 34
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾
24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾
29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾
30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾
31⁽ஆண்டவரின் மாட்சி␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ அவர் தம் செயல்களைக் குறித்து␢ மகிழ்வாராக!⁾
34⁽என் தியானப் பாடல்␢ அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!␢ நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 12: 3b-7, 12-13 or Romans 8: 8-17
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
யோவான் 20: 19-23 or யோவான் 14: 15-16, 23b-26
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
Vigil
First Reading
தொடக்க நூல் 11: 1-9 or Exodus 19: 3-8a, 16-20b or Ezekiel 37: 1-14 or Joel 3: 1-5
1அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.
2மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.
3அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்” என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.
4பின், அவர்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” என்றனர்.
5மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
6அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.
7வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” என்றார்.
8ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
9ஆகவே, அது “பாபேல்” என்று வழங்கப்பட்டது. ஏனெனில், அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 104: 1-2, 24, 35, 27-28, 29, 30
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾
2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾
24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾
35⁽பாவிகள் பூவுலகினின்று␢ ஒழிந்து போவார்களாக!␢ தீயோர்கள் இனி␢ இல்லாது போவார்களாக!␢ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!␢ அல்லேலூயா!⁾
27⁽தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று␢ இவையெல்லாம்␢ உம்மையே நம்பியிருக்கின்றன.⁾
28⁽நீர் கொடுக்க,␢ அவை சேகரித்துக் கொள்கின்றன;␢ நீர் உமது கையைத் திறக்க,␢ அவை நலன்களால் நிறைவுறுகின்றன.⁾
29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾
30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾
Second Reading
உரோமையர் 8: 22-27
22இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
23படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
24நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?
25நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.⒫
26இவ்வாறு, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.
27உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
Gospel
யோவான் 7: 37-39
37திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.
38மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.
39தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.