வாசகங்கள்
10 ஜூன், 2028
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary
Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading
2 திமொத்தேயு 4: 1-8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 71: 8-9, 14-15ab, 16-17, 22
8⁽என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;␢ நாளெல்லாம் நான் பேசுவது␢ உமது பெருமையே.⁾
9⁽முதிர் வயதில்␢ என்னைத் தள்ளிவிடாதேயும்;␢ என் ஆற்றல் குன்றும் நாளில்␢ என்னைக் கைவிடாதேயும்.⁾
14⁽ஆனால், நான்␢ என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;␢ மேலும் மேலும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டிருப்பேன்.⁾
15⁽என் வாய் நாள்தோறும்␢ உமது நீதியையும் நீர் அருளும்␢ மீட்பையும் எடுத்துரைக்கும்;␢ உம் அருட் செயல்களை␢ என்னால் கணிக்க இயலாது.⁾
16⁽தலைவராகிய ஆண்டவரே!␢ உமது வலிமைமிகு செயல்களை␢ எடுத்துரைப்பேன்;␢ உமக்கே உரிய நீதிமுறைமையைப்␢ புகழ்ந்துரைப்பேன்.⁾
17⁽கடவுளே, என் இளமைமுதல்␢ எனக்குக் கற்பித்து வந்தீர்;␢ இனிவரும் நாள்களிலும்␢ உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.⁾
22⁽என் கடவுளே, நான்␢ வீணையைக் கொண்டு உம்மையும்␢ உமது உண்மையையும் புகழ்வேன்;␢ இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾
Alleluia
மத்தேயு 5: 3
3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾
Gospel
மாற்கு 12: 38-44
38இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;
39தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;
40கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
41இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
42அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு* இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
43அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
44ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.