வாசகங்கள்
18 ஜூன், 2028
The Body and Blood Of Christ Solemnity
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 14: 18-20
18அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார்.⒫
19⁽அவர் ஆபிராமை வாழ்த்தி,␢ “விண்ணுலகையும் மண்ணுலகையும்␢ தோற்றுவித்த உன்னத கடவுள்␢ ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!⁾
20⁽உன் எதிரிகளை உன்னிடம்␢ ஒப்புவித்த உன்னத கடவுள்␢ போற்றி! போற்றி!” என்றார்.⁾ அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 110: 1, 2, 3, 4
1⁽ஆண்டவர் என் தலைவரிடம்,␢ ‛நான் உம் பகைவரை␢ உமக்குப் கால்மணையாக்கும்வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’␢ என்று உரைத்தார்.⁾
2⁽வலிமைமிகு உமது செங்கோலை␢ ஆண்டவர் சீயோனிலிருந்து ␢ ஒங்கச் செய்வார்; ␢ உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!⁾
3⁽நீர் உமது படைக்குத் ␢ தலைமை தாங்கும் நாளில்␢ தூய கோலத்துடன் உம் மக்கள்␢ தம்மை உவந்தளிப்பர்; ␢ வைகறை கருவுயிர்த்த பனியைப்போல ␢ உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.⁾
4⁽‛மெல்கிசெதேக்கின் முறைப்படி␢ நீர் என்றென்றும் குருவே’ என்று␢ ஆண்டவர் ஆணையிட்டுச்␢ சொன்னார்; அவர் தம் மனத்தை␢ மாற்றிக் கொள்ளார்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 11: 23-26
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
யோவான் 6: 51
51“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
Gospel
லூக்கா 9: 11b-17
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.
13இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.
14ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார்.
15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.
16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.
17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.