வாசகங்கள்
28 ஜூன், 2028
Irenaeus, Bishop, Martyr Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
2 அரசர்கள் 22: 8-13; 23: 1-3
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119: 33, 34, 36, 37, 40
33⁽ஆண்டவரே! உம் விதிமுறைகள்␢ காட்டும் வழியை␢ எனக்குக் கற்றுத்தாரும்;␢ நான் அவற்றை␢ இறுதிவரை கடைப்பிடிப்பேன்.⁾
34⁽உம் திருச்சட்டத்தின்படி நடக்க␢ எனக்கு மெய்யுணர்வுதாரும்.␢ அதை நான் முழு உள்ளத்தோடு␢ கடைப்பிடிப்பேன்.⁾
36⁽உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்␢ நாட்டங்கொள்ளச் செய்யும்;␢ தன்னலத்தை நாடவிடாதேயும்.⁾
37⁽வீணானவற்றை நான் பாராதபடி␢ என் கண்களைத் திருப்பிவிடும்;␢ உம் வழிகளின் வாயிலாய்␢ எனக்கு வாழ்வளித்தருளும்.⁾
40⁽உம் நியமங்களைப்␢ பெரிதும் விரும்பினேன்;␢ நீர் நீதியுள்ளவராய் இருப்பதால்␢ எனக்கு வாழ்வளியும்.⁾
Alleluia
யோவான் 15: 4a, 5b
4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.
5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
Gospel
மத்தேயு 7: 15-20
15போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
16அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?
17நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.
18நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.
19நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.
20இவ்வாறு, போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.