வாசகங்கள்
26 ஜூன், 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
2 அரசர்கள் 17: 5-8, 13-15a, 18
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 60: 3, 4-5, 12-13
3⁽உம் மக்களைக்␢ கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;␢ மதியை மயக்கும் மதுவை␢ எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.⁾
4⁽உமக்கு அஞ்சி நடப்போர்␢ எதிரிகளின் அம்பினின்று␢ தப்பித்துக்கொள்ளுமாறு␢ அவர்களுக்கெனக்␢ கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)⁾
5⁽உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு,␢ உமது வலக்கரத்தால்␢ எங்களுக்குத் துணை செய்யும்;§ எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!⁾
12⁽கடவுளின் துணையால்␢ வீரத்துடன் போரிடுவோம்;␢ அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.⁾
Alleluia
எபிரேயர் 4: 12
12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel
மத்தேயு 7: 1-5
1பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
2நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
3உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?
4அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே!
5வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.