ஜூன் 2028

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

11 ஜூன், 2028

The Holy Trinity Solemnity

அன்றைய திருப்பலி
First Reading

நீதிமொழிகள் 8: 22-31

22⁽ஆண்டவர் தம் *படைப்பின் தொடக்கத்திலேயே,* தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.⁾ 23⁽தொடக்கத்தில், பூவுலகு உண்டாகு முன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.⁾ 24⁽கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.⁾ 25⁽மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.⁾ 26⁽அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.⁾ 27⁽வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்த போது, நான் அங்கே இருந்தேன்.⁾ 28⁽உயரத்தில் மேகங்களை அவர் அமைத்த போது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.⁾ 29⁽அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,⁾ 30⁽நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய்* இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.⁾ 31⁽அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 8: 4-5, 6-7, 8-9

4⁽மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு␢ அவர்கள் யார்?␢ மனிதப் பிறவிகளை␢ நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு␢ அவர்கள் எம்மாத்திரம்?⁾ 5⁽ஆயினும், அவர்களைக்␢ கடவுளாகிய* உமக்குச்␢ சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;␢ மாட்சியையும் மேன்மையையும்␢ அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.⁾ 6⁽உமது கை படைத்தவற்றை␢ அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;␢ எல்லாவற்றையும்␢ அவர்கள் பாதங்களுக்குக்␢ கீழ்ப்படுத்தியுள்ளீர்.⁾ 7⁽ஆடுமாடுகள், எல்லா வகையான␢ காட்டு விலங்குகள்,⁾ 8⁽வானத்துப் பறவைகள்,␢ கடல் மீன்கள்,␢ ஆழ்கடலில் நீந்திச் செல்லும்␢ உயிரினங்கள் அனைத்தையும்␢ அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.⁾ 9⁽ஆண்டவரே, எங்கள் தலைவரே,␢ உமது பெயர் உலகெங்கும்␢ எவ்வளவு மேன்மையாய்␢ விளங்குகின்றது!⁾
Second Reading

உரோமையர் 5: 1-5

1ஆகையால், நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. 3அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.⒫
Alleluia

திருவெளிப்பாடு 1: 8

8“அகரமும் னகரமும் நானே”* என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
Gospel

யோவான் 16: 12-15

12“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.