வாசகங்கள்
12 ஜூன், 2028
Ordinary Weekday (Tenth Week in Ordinary Time)
அன்றைய திருப்பலி
First Reading
1 அரசர்கள் 17: 1-6
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 121: 1bc-2, 3-4, 5-6, 7-8
1⁽மலைகளை நோக்கி␢ என் கண்களை␢ உயர்த்துகின்றேன்!␢ எங்கிருந்து எனக்கு உதவி வரும்?⁾
2⁽விண்ணையும் மண்ணையும் § உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே␢ எனக்கு உதவி வரும்.⁾
3⁽அவர் உம் கால் இடறாதபடி␢ பார்த்துக் கொள்வார்;␢ உம்மைக் காக்கும் அவர்␢ உறங்கிவிடமாட்டார்.⁾
4⁽இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்␢ கண்ணயர்வதுமில்லை;␢ உறங்குவதும் இல்லை.⁾
5⁽ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;␢ அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;␢ அவரே உமக்கு நிழல் ஆவார்!⁾
6⁽பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;␢ இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.⁾
7⁽ஆண்டவர் உம்மை␢ எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;␢ அவர் உம் உயிரைக் காத்திடுவார்.⁾
8⁽நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்␢ இப்போதும் எப்போதும்␢ ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.⁾
Alleluia
மத்தேயு 5: 12a
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
Gospel
மத்தேயு 5: 1-12
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾
4⁽துயருறுவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.⁾
5⁽கனிவுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள்␢ நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.*⁾
6⁽நீதிநிலைநாட்டும்␢ வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.⁾
7⁽இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.⁾
8⁽தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.⁾
9⁽அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில் அவர்கள்␢ கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.⁾
10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.