வாசகங்கள்
15 ஜூன், 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
1 அரசர்கள் 18: 41-46
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 65: 10, 11, 12-13
10⁽அதன் படைசால்களில்␢ தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;␢ அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து␢ மென்மழையால் மிருதுவாக்கினீர்;␢ அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.⁾
11⁽ஆண்டு முழுவதும்␢ உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்;␢ உம்முடைய வழிகள் எல்லாம்␢ வளம் கொழிக்கின்றன.⁾
12⁽பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள்␢ செழுமை பொங்குகின்றன;␢ குன்றுகள் அக்களிப்பை␢ இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.⁾
13⁽புல்வெளிகள் மந்தைகளை␢ ஆடையெனக் கொண்டுள்ளன;␢ பள்ளத்தாக்குகள் தானியங்களால்␢ தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன;␢ அவற்றில் எங்கும் ஆரவாரம்!␢ எம்மருங்கும் இன்னிசை!⁾
Alleluia
யோவான் 13: 34
34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
Gospel
மத்தேயு 5: 20-26
20மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
21‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.
22ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
23ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.