ஜூன் 2028

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

16 ஜூன், 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

1 அரசர்கள் 19: 9a, 11-16

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 27: 7-8a, 8b-9abc, 13-14

7⁽ஆண்டவரே, நான் மன்றாடும்போது␢ என் குரலைக் கேட்டருளும்;␢ என்மீது இரக்கங்கொண்டு␢ எனக்குப் பதிலளித்தருளும்.⁾ 8⁽‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது␢ என் உள்ளம்; ஆண்டவரே,␢ உமது முகத்தையே நாடுவேன்.⁾ 9⁽உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;␢ நீர் சினங்கொண்டு␢ அடியேனை விலக்கிவிடாதிரும்; § நீரே எனக்குத் துணை;␢ என் மீட்பராகிய கடவுளே,␢ என்னைத் தள்ளிவிடாதிரும்;␢ என்னைக் கைவிடாதிரும்.⁾ 13⁽வாழ்வோரின் நாட்டினிலே␢ ஆண்டவரின் நலன்களைக்␢ காண்பேன் என்று␢ நான் இன்னும் நம்புகின்றேன்.⁾ 14⁽நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;␢ மன உறுதிகொள்;␢ உன் உள்ளம் வலிமை பெறட்டும்;␢ ஆண்டவருக்காகக் காத்திரு.⁾
Alleluia

பிலிப்பியர் 2: 15d, 16a

15அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். 16கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.⒫
Gospel

மத்தேயு 5: 27-32

27“‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. 29உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 30உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 31‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. 32ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.”