வாசகங்கள்
6 ஜூன், 2028
Ordinary Weekday/ Norbert, Bishop, Religious Founder
Norbert, Bishop, Religious Founder
First Reading
2 பேதுரு 3: 12-15a, 17-18
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 90: 2, 3-4, 10, 14 and 16
2⁽மலைகள் தோன்றுமுன்பே,␢ நிலத்தையும் உலகையும்␢ நீர் உருவாக்குமுன்பே,␢ ஊழி ஊழிக்காலமாய் உள்ள␢ இறைவன் நீரே!⁾
3⁽மனிதரைப் புழுதிக்குத்␢ திரும்பிடச் செய்கின்றீர்;␢ ‘மானிடரே! மீண்டும்␢ புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.⁾
4⁽ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,␢ உம் பார்வையில்␢ கடந்துபோன நேற்றைய நாள் போலவும்␢ இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.⁾
10⁽எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே;␢ வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;␢ அவற்றில் பெருமைக்கு உரியன␢ துன்பமும் துயரமுமே!␢ அவை விரைவில் கடந்துவிடுகின்றன.␢ நாங்களும் பறந்துவிடுகின்றோம்.⁾
14⁽காலைதோறும் உமது பேரன்பால்␢ எங்களுக்கு நிறைவளியும்;␢ அப்பொழுது வாழ்நாளெல்லாம்␢ நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.⁾
16⁽உம் அடியார்மீது உம் செயலும்␢ அவர்தம் மைந்தர்மீது␢ உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.⁾
Alleluia
எபேசியர் 1: 17-18
17நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!⒫
18❮18-19❯கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை,
Gospel
மாற்கு 12: 13-17
13பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.
14அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
15அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார்.
16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “சீசருடையவை” என்றார்கள்.
17அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.