ஜூன் 2028

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

30 ஜூன், 2028

Ordinary Weekday/ First Martyrs of the Church of Rome

First Martyrs of the Church of Rome
First Reading

2 அரசர்கள் 25: 1-12

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 137: 1-2, 3, 4-5, 6

1⁽பாபிலோனின் ஆறுகளருகே␢ அமர்ந்து, நாங்கள்␢ சீயோனை நினைத்து அழுதோம்.⁾ 2⁽அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,␢ எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.⁾ 3⁽ஏனெனில், அங்கு எங்களைச்␢ சிறையாக்கினோர்␢ எங்களைப் பாடும்படி கேட்டனர்;␢ எங்களைக் கடத்திச் சென்றோர்␢ எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு␢ கேட்டனர்.␢ ‛சீயோனின் பாடல்களை␢ எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.⁾ 4⁽ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை␢ அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?⁾ 5⁽எருசலேமே! நான் உன்னை மறந்தால்␢ என் வலக்கை சூம்பிப்போவதாக!⁾ 6⁽உன்னை நான் நினையாவிடில்,␢ எனது மகிழ்ச்சியின் மகுடமாக␢ நான் எருசலேமைக் கருதாவிடில்,␢ என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!⁾
Alleluia

மத்தேயு 8: 17

17இவ்வாறு, ⁽‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; § நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’⁾ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
Gospel

மத்தேயு 8: 1-4

1இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். 2அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். 3இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. 4இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.