வாசகங்கள்
23 செப்டம்பர், 2026
Memorial of Saint Pius of Pietrelcina, Priest
அன்றைய திருப்பலி
Reading I
நீதிமொழிகள் 30:5-9
5⁽கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக் கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார்.⁾
6⁽அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.⁾
7⁽வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.⁾
8⁽வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.⁾
9⁽எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119:29, 72, 89, 101, 104, 163
29⁽பொய் வழியை␢ என்னைவிட்டு விலக்கியருளும்;␢ உமது திருச்சட்டத்தை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾
72⁽நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,␢ ஆயிரக்கணக்கான பொன்,␢ வெள்ளிக் காசுகளைவிட␢ எனக்கு மேலானது.⁾
89⁽ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது␢ உமது வாக்கு;␢ விண்ணுலகைப்போல்␢ அது நிலைத்துள்ளது.⁾
101⁽உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு␢ தீயவழி எதிலும் நான் கால் வைக்காது␢ பார்த்துக் கொள்கின்றேன்.⁾
104⁽உம் நியமங்களால் நான்␢ நுண்ணறிவு பெறுகின்றேன்.␢ ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும்␢ நான் வெறுக்கின்றேன்.⁾
163⁽பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்;␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾
Alleluia
மாற்கு 1:15
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel
லூக்கா 9:1-6
1இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்.
2இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
3அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்.
4நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.
5உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார்.
6அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.