செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

30 செப்டம்பர், 2026

Memorial of Saint Jerome, Priest and Doctor of the Church

அன்றைய திருப்பலி
Reading I

யோபு 9:1-12, 14-16

1யோபு அதற்கு உரைத்த பதில்: 2⁽உண்மையில் இது இவ்வாறு␢ என்று அறிவேன்; ஆனால், மனிதர்␢ இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?⁾ 3⁽ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,␢ ஆயிரத்தில் ஒன்றுக்கேனும்␢ அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?⁾ 4⁽இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;␢ ஆற்றலில் வல்லவர்;␢ அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,␢ வளமுடன் வாழ்ந்தவர் யார்?⁾ 5⁽அவர் மலைகளை அகற்றுவார்;␢ அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்␢ அவைகளைத் தலைகீழாக்குவார்.⁾ 6⁽அசைப்பார் அவர் நிலத்தை␢ அதனிடத்தினின்று;␢ அதிரும் அதனுடைய தூண்கள்.⁾ 7⁽அவர் கட்டளையிடுவார்;␢ கதிரவன் தோன்றான்;␢ அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.⁾ 8⁽தாமே தனியாய் வானை விரித்தவர்,␢ ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.⁾ 9⁽வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,␢ கார்த்திகை விண்மீன்களையும்,␢ தென்திசை விண்மீன் குழுக்களையும்␢ அமைத்தவர் அவரே.⁾ 10⁽உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,␢ கணக்கிட முடியா அருஞ்செயல்களையும்␢ ஆற்றுநர் அவரே.⁾ 11⁽இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்␢ நான் பார்க்க முடியவில்லை; நழுவிச்␢ செல்கையில் நான் உணர முடியவில்லை.⁾ 12⁽இதோ! அவர் பறிப்பாரானால்,␢ அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர்␢ என அவரைத் கேட்பார் யார்?⁾ 14⁽இப்படியிருக்க, எப்படி அவருக்குப்␢ பதிலுரைப்பேன்? எதிர்நின்று␢ அவரோடு எச்சொல் தொடுப்பேன்?⁾ 15⁽நான் நேர்மையாக இருந்தாலும்␢ அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;␢ என் நீதிபதியிடம் நான்␢ இரக்கத்தையே கெஞ்சுவேன்.⁾ 16⁽நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,␢ என் வேண்டுதலுக்கு அவர்␢ செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 88:10-11, 12-13, 14-15

10⁽இறந்தோர்க்காகவா நீர்␢ வியத்தகு செயல்கள் செய்வீர்?␢ கீழுலகின் ஆவிகள் எழுந்து␢ உம்மைப் புகழுமோ? (சேலா)⁾ 11⁽கல்லறையில் உமது பேரன்பு␢ எடுத்துரைக்கப்படுமா?␢ அழிவின் தலத்தில்␢ உமது உண்மை அறிவிக்கப்படுமா?⁾ 12⁽இருட்டினில் உம் அருஞ்செயல்கள்␢ அறியப்படுமா?␢ மறதி உலகில்␢ உம் நீதிநெறி உணரப்படுமா?⁾ 13⁽ஆண்டவரே! நானோ␢ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;␢ காலையில் உம்மை நோக்கி␢ மன்றாடுகின்றேன்.⁾ 14⁽ஆண்டவரே! என்னை ஏன்␢ தள்ளிவிடுகின்றீர்?␢ உமது முகத்தை என்னிடமிருந்து␢ ஏன் மறைக்கின்றீர்?⁾ 15⁽என் இளமைமுதல் நான் துன்புற்று␢ மடியும் நிலையில் உள்ளேன்;␢ உம்மால் வந்த பெருந் திகிலால்␢ தளர்ந்து போனேன்.⁾
Alleluia

பிலிப்பியர் 3:8-9

8உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். 9கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
Gospel

லூக்கா 9:57-62

57அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். 58இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். 59இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றிவாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். 60இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.⒫ 61வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். 62இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.