வாசகங்கள்
11 செப்டம்பர், 2026
Friday of the Twenty-third Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 கொரிந்தியர் 9:16-19, 22-27
16நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
17இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.
18அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.⒫
19நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
22வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.⒫
23நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
24பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.
25பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம்.
26நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.
27பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்
Responsorial Psalm
திருப்பாடல்கள் 84:3, 4, 5-6, 12
3⁽படைகளின் ஆண்டவரே!␢ என் அரசரே! என் கடவுளே!␢ உமது பீடங்களில்␢ அடைக்கலான் குருவிக்கு␢ வீடு கிடைத்துள்ளது;␢ தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்␢ சிட்டுக் குருவிகளுக்குக்␢ கூடும் கிடைத்துள்ளது.⁾
4⁽உமது இல்லத்தில் தங்கியிருப்போர்␢ நற்பேறு பெற்றோர்;␢ அவர்கள் எந்நாளும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)⁾
5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾
6⁽வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை␢ அவர்கள் கடந்து செல்கையில்,␢ அது நீருற்றுகள் உள்ள இடமாக␢ மாறுகின்றது;␢ முதல் பருவமழை அதனை␢ நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.⁾
12⁽படைகளின் ஆண்டவரே!␢ உம்மை நம்பும் மானிடர்␢ நற்பேறு பெற்றோர்!⁾
Alleluia
யோவான் 17:17, 17
17உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
Gospel
லூக்கா 6:39-42
39மேலும், இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
40சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால், தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.⒫
41“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?
42உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.