செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

13 செப்டம்பர், 2026

Twenty-fourth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

சீராக் 27:30-28:7

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 103:1-2, 3-4, 9-10, 11-12

1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾ 2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾ 3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾ 4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾ 9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾ 10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾ 11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾ 12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾
Reading II

உரோமையர் 14:7-9

7நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. 8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். 9ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.
Alleluia

யோவான் 13:34

34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
Gospel

மத்தேயு 18:21-35

21பின்பு, பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். 22அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். 23விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். 24அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து* கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். 25அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். 26உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். 27அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். 28ஆனால், அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம்* கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். 29உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். 30ஆனால், அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். 31அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். 32அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். 33நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். 34அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். 35உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”