செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

4 செப்டம்பர், 2026

Friday of the Twenty-second Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

1 கொரிந்தியர் 4:1-5

1நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். 2பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! 3என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். 4எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. 5எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 37:3-4, 5-6, 27-28, 39-40

3⁽ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;␢ நாட்டிலேயே குடியிரு;␢ நம்பத் தக்கவராய் வாழ்.⁾ 4⁽ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;␢ உன் உள்ளத்து விருப்பங்களை␢ அவர் நிறைவேற்றுவார்.⁾ 5⁽உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;␢ அவரையே நம்பியிரு;␢ அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.⁾ 6⁽உன் நேர்மையைக் கதிரொளி போலும்,␢ உன் நாணயத்தை நண்பகல் போலும்␢ அவர் விளங்கச் செய்வார்.⁾ 27⁽தீமையினின்று விலகு; நல்லது செய்;␢ எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.⁾ 28⁽ஏனெனில், ஆண்டவர்␢ நேர்மையை விரும்புகின்றார்;␢ தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;␢ அவர்களை என்றும் பாதுகாப்பார்.␢ பொல்லாரின் மரபினரோ␢ வேரறுக்கப்படுவர்.⁾ 39⁽நேர்மையாளருக்கு மீட்பு␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது;␢ நெருக்கடியான நேரத்தில்␢ அவர்களுக்கு வலிமையும் அவரே.⁾ 40⁽ஆண்டவர் துணைநின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ பொல்லாரிடமிருந்து␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,␢ அவர்களை மீட்கின்றார்.⁾
Alleluia

யோவான் 8:12

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel

லூக்கா 5:33-39

33பின்பு, அவர்கள் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். 34இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? 35ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.⒫ 36அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.”⒫ 37“அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். 38புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். 39பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”