வாசகங்கள்
5 செப்டம்பர், 2026
Saturday of the Twenty-second Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 கொரிந்தியர் 4:6-15
6சகோதர சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், “எழுதியுள்ளதற்கு மேல் போகாதே” என்பதின் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.
7நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?⒫
8தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.
9கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.
10நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள்.
11இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம்.
12எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம்.
13அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.⒫
14உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.
15கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால், தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145:17-18, 19-20, 21
17⁽ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்␢ நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்␢ இரக்கச் செயல்களே.⁾
18⁽தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,␢ உண்மையாய்த் தம்மை நோக்கி␢ மன்றாடும் யாவருக்கும்,␢ ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.⁾
19⁽அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்␢ விருப்பத்தை நிறைவேற்றுவார்;␢ அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து␢ அவர்களைக் காப்பாற்றுவார்.⁾
20⁽ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்␢ அனைவரையும் பாதுகாக்கின்றார்;␢ பொல்லார் அனைவரையும் அழிப்பார்.⁾
21⁽என் வாய் ஆண்டவரின் புகழை␢ அறிவிப்பதாக!␢ உடல்கொண்ட அனைத்தும்␢ அவரது திருப்பெயரை␢ என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!⁾
Alleluia
யோவான் 14:6
6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel
லூக்கா 6:1-5
1ஓர் ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்
2பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
3அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?
4அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார்.
5மேலும் அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.