செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

3 செப்டம்பர், 2026

Memorial of Saint Gregory the Great, Pope and Doctor of the Church

அன்றைய திருப்பலி
Reading I

1 கொரிந்தியர் 3:18-23

18எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். 19இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, ⁽“ஞானிகளைக் கடவுள்␢ அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர்.”⁾ 20மேலும், ⁽ “ஞானிகளின் எண்ணங்கள்␢ வீணானவை என␢ ஆண்டவர் அறிவார்.”⁾ 21❮21-22❯எனவே, மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. 22Same as above 23ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 24:1-2, 3-4, 5-6

1⁽மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள␢ அனைத்தும் ஆண்டவருடையவை;␢ நிலவுலகும் அதில் வாழ்வனவும்␢ அவருக்கே சொந்தம்.⁾ 2⁽ஏனெனில், அவரே கடல்கள்மீது␢ அதற்கு அடித்தளமிட்டார்;␢ ஆறுகள்மீது அதை␢ நிலைநாட்டினவரும் அவரே.⁾ 3⁽ஆண்டவரது மலையில் ஏறத்␢ தகுதியுள்ளவர் யார்?␢ அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?⁾ 4⁽கறைபடாத கைகளும்␢ மாசற்ற மனமும் உடையவர்;␢ பொய்த் தெய்வங்களை நோக்கித்␢ தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;␢ வஞ்சக நெஞ்சோடு␢ ஆணையிட்டுக் கூறாதவர்,⁾ 5⁽இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;␢ தம் மீட்பராம் கடவுளிடமிருந்து␢ நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.⁾ 6⁽அவரை நாடுவோரின்␢ தலைமுறையினர் இவர்களே:␢ *யாக்கோபின் கடவுளது முகத்தைத்*␢ தேடுவோர் இவர்களே. (சேலா)⁾
Alleluia

மத்தேயு 4:19

19இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.
Gospel

லூக்கா 5:1-11

1ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். 2அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். 3அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.⒫ 4அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். 5சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். 6அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, 7மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. 8இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். 9அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். 10சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். 11அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.