வாசகங்கள்
15 செப்டம்பர், 2026
Memorial of Our Lady of Sorrows
அன்றைய திருப்பலி
Reading I
1 கொரிந்தியர் 12:12-14, 27-31
12உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்.
13ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.⒫
14உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.
27நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
28அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார்.
29எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை.
30எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!
31[a] எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.⒯[b] எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 100:1-2, 3, 4, 5
1⁽அனைத்துலகோரே!␢ ஆண்டவரை ஆர்ப்பரித்து␢ வாழ்த்துங்கள்!⁾
2⁽ஆண்டவரை␢ மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!␢ மகிழ்ச்சிநிறை பாடலுடன்␢ அவர் திருமுன் வாருங்கள்!⁾
3⁽ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!␢ அவரே நம்மைப் படைத்தவர்!␢ நாம் அவர் மக்கள்,␢ அவர் மேய்க்கும் ஆடுகள்!⁾
4⁽நன்றியோடு அவர்தம்␢ திருவாயில்களில் நுழையுங்கள்!␢ புகழ்ப்பாடலோடு அவர்தம்␢ முற்றத்திற்கு வாருங்கள்!␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவர் பெயரைப் போற்றுங்கள்!⁾
5⁽ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;␢ என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;␢ தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.⁾
Alleluia
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
யோவான் 19:25-27
25சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
26இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
27பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.