செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

9 செப்டம்பர், 2026

Memorial of Saint Peter Claver, Priest[In the Dioceses of the United States]

அன்றைய திருப்பலி
Reading I

1 கொரிந்தியர் 7:25-31

25இனி, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். 26மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.⒫ 27மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது. 28நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால், திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.⒫ 29அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். 30அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். 31உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 45:11-12, 14-15, 16-17

11⁽உனது எழிலில்␢ நாட்டங்கொள்வார் மன்னர்;␢ உன் தலைவர் அவரே;␢ அவரைப் பணிந்திடு!⁾ 12⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾ 14⁽பலவண்ணப் பட்டுடுத்தி␢ மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;␢ கன்னித் தோழியர் புடைசூழ␢ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.⁾ 15⁽மன்னவரின் மாளிகைக்குள்␢ நுழையும்போது அவர்கள்␢ மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்␢ அழைத்து வரப்படுவர்.⁾ 16⁽உம் தந்தையரின் அரியணையில்␢ உம் மைந்தரே வீற்றிருப்பர்;␢ அவர்களை நீர் உலகுக்கெலாம்␢ இளவரசர் ஆக்கிடுவீர்.⁾ 17⁽என் பாடல் வழிவழியாய்␢ உம் பெயரை நிலைக்கச் செய்யும்;␢ ஆகையால், எல்லா இனத்தாரும்␢ உமை வாழ்த்திடுவர்.⁾
Alleluia

லூக்கா 6:23

23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
Gospel

லூக்கா 6:20-26

20இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ⁽“ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், இறையாட்சி␢ உங்களுக்கு உரியதே.⁾ 21⁽இப்பொழுது பட்டினியாய் இருப்போரே,␢ நீங்கள் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.␢ இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே,␢ நீங்கள் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.⁾⒫ 22மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். 23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர். 24⁽ஆனால் செல்வர்களே␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், நீங்கள் எல்லாம்␢ அனுபவித்துவிட்டீர்கள்.⁾ 25⁽இப்போது உண்டு கொழுந்திருப்போரே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், பட்டினி கிடப்பீர்கள்.␢ இப்போது சிரித்து இன்புறுவோரே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், துயருற்று அழுவீர்கள்.⁾⒫ 26மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.