ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

9 ஜூன், 2026

Tuesday of the Tenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

1 அரசர்கள் 17:7-16

7நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது. 8அப்பொழுது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது; 9“நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”. 10எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். 11அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார். 12அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்றார். 13எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். 14இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார். 15அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். 16எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 4:2-3, 4-5, 7-8

2⁽மானிடரே! எவ்வளவு காலம்␢ எனக்குரிய மாட்சிக்கு␢ இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?␢ எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்␢ பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)⁾ 3⁽ஆண்டவர் என்னைத் தம்␢ அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;␢ நான் மன்றாடும் போது␢ அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;␢ – இதை அறிந்துகொள்ளுங்கள்.⁾ 4⁽சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;␢ படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி␢ அமைதியாயிருங்கள். (சேலா)⁾ 5⁽முறையான பலிகளைச் செலுத்துங்கள்;␢ ஆண்டவரை நம்புங்கள்.⁾ 7⁽தானியமும் திராட்சையும்␢ நன்கு விளையும் காலத்தில் அடையும்␢ மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை␢ நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.⁾ 8⁽இனி, நான் மன அமைதியுடன்␢ படுத்துறங்குவேன்; ஏனெனில்,␢ ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்␢ நீரே என்னைப் பாதுகாப்புடன் § வாழச் செய்கின்றீர்.⁾
Alleluia

மத்தேயு 5:16

16இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
Gospel

மத்தேயு 5:13-16

13நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. 14நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. 15எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். 16இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.