வாசகங்கள்
30 ஜூன், 2026
Tuesday of the Thirteenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
ஆமோஸ் 3:1-8; 4:11-12
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 5:4-6, 6-7, 8
4⁽ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து␢ மகிழும் இறைவன் இல்லை;␢ உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.⁾
5⁽ஆணவமிக்கோர்␢ உமது கண்முன் நிற்க மாட்டார்;␢ தீங்கிழைக்கும் அனைவரையும்␢ நீர் வெறுக்கின்றீர்.⁾
6⁽பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;␢ கொலை வெறியரையும் வஞ்சகரையும்␢ அருவருக்கின்றீர்.⁾
7⁽நானோ உம் பேரருளால்␢ உமது இல்லம் சென்றிடுவேன்;␢ உம் திருத்தூயகத்தை நோக்கி␢ இறையச்சத்துடன்␢ உம்மைப் பணிந்திடுவேன்;⁾
8⁽ஆண்டவரே, எனக்குப் பகைவர்␢ பலர் இருப்பதால்,␢ உமது நீதியின் பாதையில்␢ என்னை நடத்தும்;␢ உமது செம்மையான வழியை␢ எனக்குக் காட்டியருளும்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 130:5
5⁽ஆண்டவருக்காக ஆவலுடன் நான்␢ காத்திருக்கின்றேன்;␢ என் நெஞ்சம் காத்திருக்கின்றது;␢ அவரது சொற்களுக்காக␢ ஆவலுடன் காத்திருக்கின்றேன்.⁾
Gospel
மத்தேயு 8:23-27
23பின்பு, இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.
24திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.
25சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
26இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.
27மக்களெல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.