ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

11 ஜூன், 2026

Memorial of Saint Barnabas, Apostle

அன்றைய திருப்பலி
Reading I

திருத்தூதர் பணிகள் 11:21-26; 13:1-3

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 98:1, 2-3, 3-4, 5-6

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾ 2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾ 3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾ 4⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அனைவரும் ஆண்டவரை␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!␢ மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்␢ புகழ்ந்தேத்துங்கள்.⁾ 5⁽யாழினை மீட்டி␢ ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ யாழினை மீட்டி இனிய குரலில்␢ அவரை வாழ்த்திப் பாடுங்கள்.⁾ 6⁽ஆண்டவராகிய அரசரின் முன்னே␢ எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.⁾
Alleluia

யோவான் 13:34

34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
Gospel

மத்தேயு 5:20-26

20மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். 21‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். 22ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 23ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.