ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

21 ஜூன், 2026

Twelfth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

எரேமியா 20:10-13

10⁽‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று␢ பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;␢ ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள்,␢ அவன்மேல் பழி சுமத்துவோம்’␢ என்கிறார்கள்.␢ என் நண்பர்கள்கூட␢ என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;␢ ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்;␢ நாம் அவன்மேல் வெற்றி கொண்டு␢ அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’␢ என்கிறார்கள்.⁾ 11⁽ஆனால், ஆண்டவர்␢ வலிமை வாய்ந்த வீரரைப் போல␢ என்னோடு இருக்கின்றார்.␢ எனவே, என்னைத் துன்புறுத்துவோர்␢ இடறி விழுவர்.␢ அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்.␢ அவர்கள் விவேகத்தோடு␢ செயல்படவில்லை;␢ அவர்களின் அவமானம் என்றும்␢ நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.⁾ 12⁽படைகளின் ஆண்டவரே!␢ நேர்மையாளரை சோதித்தறிபவரும்␢ உள்ளுணர்வுகளையும்␢ இதயச் சிந்தனைகளையும்␢ அறிபவரும் நீரே;␢ நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை␢ நான் காணவேண்டும்;␢ ஏனெனில், என் வழக்கை␢ உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.⁾ 13⁽ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத்␢ தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 69:8-10, 14, 17, 33-35

8⁽என் சகோதரருக்கு␢ வேற்று மனிதனானேன்;␢ என் தாயின் பிள்ளைகளுக்கு␢ அயலான் ஆனேன்.⁾ 9⁽உமது இல்லத்தின்மீது␢ எனக்குண்டான ஆர்வம்␢ என்னை எரித்துவிட்டது;␢ உம்மைப் பழித்துப் பேசினவர்களின்␢ பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.⁾ 10⁽நோன்பிருந்து நான்␢ நெக்குருகி அழுதேன்;␢ அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.⁾ 14⁽சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து␢ என்னைக் காத்தருளும்;␢ என்னை வெறுப்போரிடமிருந்தும்␢ ஆழ்கடலிலிருந்தும்␢ என்னை விடுவித்தருளும்.⁾ 17⁽உமது முகத்தை␢ அடியேனுக்கு மறைக்காதேயும்;␢ நான் நெருக்கடியான␢ நிலையிலிருக்கிறேன்;␢ என் மன்றாட்டுக்கு␢ விரைவில் பதில்மொழி தாரும்.⁾ 33⁽ஆண்டவர்␢ ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்க்கின்றார்;␢ சிறைப்பட்ட தம் மக்களை␢ அவர் புறக்கணிப்பதில்லை.⁾ 34⁽வானமும் வையமும் கடல்களும்␢ அவற்றில் வாழும் யாவும்␢ அவரைப் புகழட்டும்.⁾ 35⁽கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;␢ யூதாவின் நகரங்களைக்␢ கட்டி எழுப்புவார்;␢ அப்பொழுது அவர்களுடைய மக்கள்␢ அங்கே குடியிருப்பார்கள்;␢ நாட்டைத் தங்களுக்குச்␢ சொந்தமாக்கிக் கொள்வார்கள்.⁾
Reading II

உரோமையர் 5:12-15

12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. 13திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. 14[a] ஆயினும், ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று;⒫ [b] இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். 15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும்* இறந்தனர். ஆனால், கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
Alleluia

யோவான் 15:26, 27

26தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். 27நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.
Gospel

மத்தேயு 10:26-33

26“எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில், வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. 27நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். 28ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.⒫ 29காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. 30உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. 31சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள். 32“மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். 33மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.