வாசகங்கள்
13 ஜூன், 2026
Saturday of the Tenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 அரசர்கள் 19:19-21
19எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.
20எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.
21எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 16:1-2 and 5, 7-8, 9-10
1⁽இறைவா, என்னைக் காத்தருளும்;␢ உம்மிடம் நான் அடைக்கலம்␢ புகுந்துள்ளேன்.⁾
2⁽நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;␢ உம்மையன்றி வேறு செல்வம்␢ எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.⁾
5⁽ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;␢ அவரே என் கிண்ணம்;␢ எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;⁾
7⁽எனக்கு அறிவுரை வழங்கும்␢ ஆண்டவரைப் போற்றுகின்றேன்;␢ இரவில்கூட என் மனச்சான்று␢ என்னை எச்சரிக்கின்றது.⁾
8⁽ஆண்டவரை எப்போதும்␢ என் கண்முன் வைத்துள்ளேன்;␢ அவர் என் வலப்பக்கம் உள்ளார்;␢ எனவே, நான் அசைவுறேன்.⁾
9⁽என் இதயம் அக்களிக்கின்றது;␢ என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;␢ என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.⁾
10⁽ஏனெனில், என்னைப்␢ பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;␢ உம் அன்பனைப் படுகுழியைக்␢ காண விடமாட்டீர்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 119:36, 29
36⁽உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்␢ நாட்டங்கொள்ளச் செய்யும்;␢ தன்னலத்தை நாடவிடாதேயும்.⁾
29⁽பொய் வழியை␢ என்னைவிட்டு விலக்கியருளும்;␢ உமது திருச்சட்டத்தை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾
Gospel
மத்தேயு 5:33-37
33“மேலும், ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை.
35மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம்.
36உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
37ஆகவே, நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.