ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

25 ஜூன், 2026

Thursday of the Twelfth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

2 அரசர்கள் 24:8-17

8யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய். 9யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். 10அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர். 11அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான். 12எனவே, யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான். 13பின்பு, அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டுதுண்டாக்கினான். 14மேலும், அவன் எருசலேம் முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை. 15மேலும், அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான். 16மேலும், வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும் போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். 17யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் “செதேக்கியா” என்று மாற்றினான்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 79:1-2, 3-5, 8, 9

1⁽கடவுளே, வேற்று நாட்டினர்␢ உமது உரிமைச் சொத்தினுள்␢ புகுந்துள்ளனர்;␢ உமது திருக்கோவிலைத்␢ தீட்டுப்படுத்தியுள்ளனர்;␢ எருசலேமைப் பாழடையச் செய்தனர்.⁾ 2⁽உம் ஊழியரின் சடலங்களை␢ வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும்␢ உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக்␢ காட்டு விலங்குகளுக்கு உணவாகவும்␢ அவர்கள் அளித்துள்ளார்கள்;⁾ 3⁽அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென␢ எருசலேமைச் சுற்றிலும்␢ அள்ளி இறைத்தார்கள்;␢ அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.⁾ 4⁽எங்களை அடுத்து வாழ்வோரின்␢ பழிச்சொல்லுக்கு இலக்கானோம்;␢ எங்களைச் சூழ்ந்துள்ளோரின்␢ நகைப்புக்கும் ஏளனத்திற்கும் § ஆளாகிவிட்டோம்.⁾ 5⁽ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம்␢ நீர் சினம் கொண்டிருப்பீர்?␢ என்றென்றுமா?␢ உமது வெஞ்சினம்␢ நெருப்பாக எரியுமோ?⁾ 8⁽எம் மூதாதையரின் குற்றங்களை␢ எம்மீது சுமத்தாதேயும்!␢ உம் இரக்கம் எமக்கு␢ விரைவில் கிடைப்பதாக!␢ நாங்கள் மிகவும்␢ தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.⁾ 9⁽எங்கள் மீட்பராகிய கடவுளே!␢ உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு␢ எங்களுக்கு உதவி செய்தருளும்;␢ உமது பெயரை முன்னிட்டு␢ எங்களை விடுவித்தருளும்;␢ எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.⁾
Alleluia

யோவான் 14:23

23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
Gospel

மத்தேயு 7:21-29

21என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். 22அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். 23அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன். 24“ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். 25மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. 26நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். 27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”⒫ 28இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். 29ஏனெனில், அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்