ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஜூன், 2026

Solemnity of the Nativity of Saint John the BaptistMass during the Day (Mass During the Day)

Mass During the Day
Reading I

எசாயா 49:1-6

1⁽தீவு நாட்டினரே, எனக்குச்␢ செவிகொடுங்கள்;␢ தொலைவாழ் மக்களினங்களே,␢ கவனியுங்கள்;␢ கருப்பையில் இருக்கும்போதே␢ ஆண்டவர் என்னை அழைத்தார்;␢ என் தாய் வயிற்றில் உருவாகும் போதே␢ என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.⁾ 2⁽என் வாயைக்␢ கூரான வாள்போன்று ஆக்கினார்;␢ தம் கையின் நிழலால்␢ என்னைப் பாதுகாத்தார்;␢ என்னைப் பளபளக்கும்␢ அம்பு ஆக்கினார்;␢ தம் அம்பறாத் துணியில்␢ என்னை மறைத்துக் கொண்டார்.⁾ 3⁽அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன்,␢ இஸ்ரயேலே! உன் வழியாய்␢ நான் மாட்சியுறுவேன்’ என்றார்.⁾ 4⁽நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்:␢ வெறுமையாகவும் பயனின்றியும்␢ என் ஆற்றலைச் செலவழித்தேன்:␢ ஆயினும் எனக்குரிய நீதி␢ ஆண்டவரிடம் உள்ளது;␢ என் பணிக்கான பரிசு␢ என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன்.⁾ 5⁽யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,␢ சிதறுண்ட இஸ்ரயேலை␢ ஒன்று திரட்டவும்␢ கருப்பையிலிருந்தே ஆண்டவர்␢ என்னைத் தம் ஊழியனாக␢ உருவாக்கினார்;␢ ஆண்டவர் பார்வையில்␢ நான் மதிப்புப்பெற்றவன்;␢ என் கடவுளே என் ஆற்றல்;␢ அவர் இப்பொழுது உரைக்கிறார்:⁾ 6⁽அவர் கூறுவது:␢ யாக்கோபின் குலங்களை␢ நிலைநிறுத்துவதற்கும்␢ இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்␢ திருப்பிக் கொணர்வதற்கும்␢ நீ என் ஊழியனாக இருப்பது␢ எளிதன்றோ?␢ உலகம் முழுவதும்␢ என் மீட்பை அடைவதற்கு␢ நான் உன்னைப் பிற இனத்தாருக்கு␢ ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 139:1-3, 13-14, 14-15

1⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾ 2⁽நான் அமர்வதையும் எழுவதையும்␢ நீர் அறிந்திருக்கின்றீர்;␢ என் நினைவுகளை எல்லாம்␢ தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.⁾ 3⁽நான் நடப்பதையும் படுப்பதையும்␢ நீர் அறிந்துள்ளீர்;␢ என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவையே.⁾ 13⁽ஏனெனில், என் உள் உறுப்புகளை␢ உண்டாக்கியவர் நீரே!␢ என் தாயின் கருவில்␢ எனக்கு உருதந்தவர் நீரே!⁾ 14⁽அஞ்சத்தகு, வியத்தகு முறையில்␢ நீர் என்னைப் படைத்ததால்,␢ நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;␢ உம் செயல்கள்␢ வியக்கத்தக்கவை என்பதை␢ என் மனம் முற்றிலும் அறியும்.⁾ 15⁽என் எலும்பு உமக்கு மறைவானதன்று;␢ மறைவான முறையில்␢ நான் உருவானதையும்␢ பூவுலகின் ஆழ்பகுதிகளில்␢ நான் உருப்பெற்றதையும்␢ நீர் அறிந்திருந்தீர்.⁾
Reading II

திருத்தூதர் பணிகள் 13:22-26

22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ⁽“ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்”⁾ என்று சான்று பகர்ந்தார். 23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் “நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை” என்று கூறினார். 26சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
Alleluia

லூக்கா 1:76

76❮76-77❯⁽குழந்தாய், நீ உன்னத கடவுளின்␢ இறைவாக்கினர் எனப்படுவாய்;␢ ஏனெனில், பாவ மன்னிப்பால்␢ வரும் மீட்பை␢ அவர்தம் மக்களுக்கு அறிவித்து␢ ஆண்டவருக்கான␢ வழியைச் செம்மைப்படுத்த␢ அவர் முன்னே செல்வாய்.⁾
Gospel

லூக்கா 1:57-66, 80

57எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 58ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். 59எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். 60ஆனால், அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். 61அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, 62“குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். 63அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். 64அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 65சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. 66கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. 80குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.
Vigil Mass
Reading I

எரேமியா 1:4-10

4⁽எனக்கு அருளப்பட்ட␢ ஆண்டவரின் வாக்கு:⁾ 5⁽“தாய் வயிற்றில் உன்னை நான்␢ உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;␢ நீ பிறக்குமுன்பே உன்னைத்␢ திருநிலைப்படுத்தினேன்;␢ மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக␢ உன்னை ஏற்படுத்தினேன்.”⁾ 6⁽நான், “என் தலைவராகிய ஆண்டவரே,␢ எனக்குப் பேசத் தெரியாதே,␢ சிறுபிள்ளைதானே” என்றேன்.⁾ 7⁽ஆண்டவர் என்னிடம் கூறியது:␢ “‘சிறுபிள்ளை நான்’␢ என்று சொல்லாதே;␢ யாரிடமெல்லாம் உன்னை␢ அனுப்புகின்றேனோ␢ அவர்களிடம் செல்;␢ எவற்றை எல்லாம் சொல்லக்␢ கட்டளை இடுகின்றேனோ␢ அவற்றைச் சொல்.⁾ 8⁽அவர்கள்முன் அஞ்சாதே.␢ ஏனெனில், உன்னை விடுவிக்க␢ நான் உன்னோடு இருக்கின்றேன்,␢ என்கிறார் ஆண்டவர்.”⁾ 9⁽ஆண்டவர் தம் கையை நீட்டி␢ என் வாயைத் தொட்டு␢ என்னிடம் கூறியது:␢ “இதோ பார்! என் சொற்களை␢ உன் வாயில் வைத்துள்ளேன்.⁾ 10⁽பிடுங்கவும் தகர்க்கவும்,␢ அழிக்கவும் கவிழ்க்கவும்,␢ கட்டவும் நடவும்,␢ இன்று நான் உன்னை␢ மக்களினங்கள் மேலும்}␢ அரசுகள் மேலும்␢ பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 71:1-2, 3-4, 5-6, 15 and 17

1⁽ஆண்டவரே! உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ ஒருபோதும் நான் வெட்கமுற␢ விடாதேயும்.⁾ 2⁽உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;␢ எனக்கு நீர் செவிசாய்த்து␢ என்னை மீட்டுக் கொள்ளும்.⁾ 3⁽என் அடைக்கலப் பாறையாக␢ நீர் இருந்தருளும்;␢ கோட்டை அரணாயிருந்து␢ என்னை மீட்டருளும்;␢ ஏனெனில், நீர் எனக்குக்␢ கற்பாறையாகவும்␢ அரணாகவும் இருக்கின்றீர்.⁾ 4⁽என் கடவுளே, பொல்லார் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்␢ பிடியினின்று என்னைக் காத்தருளும்.⁾ 5⁽என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;␢ ஆண்டவரே, இளமைமுதல்␢ நீரே என் நம்பிக்கை.⁾ 6⁽பிறப்பிலிருந்து நான் உம்மைச்␢ சார்ந்துள்ளேன்;␢ தாய் வயிற்றிலிருந்து␢ நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;␢ உம்மையே நான் எப்போதும்␢ புகழ்ந்து போற்றுவேன்.⁾ 15⁽என் வாய் நாள்தோறும்␢ உமது நீதியையும் நீர் அருளும்␢ மீட்பையும் எடுத்துரைக்கும்;␢ உம் அருட் செயல்களை␢ என்னால் கணிக்க இயலாது.⁾ 17⁽கடவுளே, என் இளமைமுதல்␢ எனக்குக் கற்பித்து வந்தீர்;␢ இனிவரும் நாள்களிலும்␢ உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.⁾
Reading II

1 பேதுரு 1:8-12

8நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும், நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். 9இவ்வாறு, உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.⒫ 10உங்களுக்கென்றிருந்த அருளைப் பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்குரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். 11தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடைய வேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். 12அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்து கொள்ள வானதூதர்களும் ஆவலோடிருந்தார்கள்.
Alleluia

யோவான் 1:7; Luke 1:17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 1:5-17

5யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. 6அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். 7அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.⒫ 8தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். 9குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. 10அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். 11அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். 12அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். 13வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். 14நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். 15அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். 16அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். 17எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.⒫