வாசகங்கள்
18 ஜூன், 2026
Thursday of the Eleventh Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
சீராக் 48:1-14
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 97:1-2, 3-4, 5-6, 7
1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾
2⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾
3⁽நெருப்பு அவர்முன் செல்கின்றது;␢ சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச்␢ சுட்டெரிக்கின்றது.⁾
4⁽அவர்தம் மின்னல்கள்␢ பூவுலகை ஒளிர்விக்கின்றன;␢ மண்ணுலகம் அதைக் கண்டு␢ நடுங்குகின்றது.⁾
5⁽ஆண்டவர் முன்னிலையில், § அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,␢ மலைகள் மெழுகென உருகுகின்றன.⁾
6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾
7⁽உருவங்களை வழிபடுவோரும்␢ சிலைகள் பற்றிப்␢ பெருமையடித்துக் கொள்வோரும்␢ வெட்கத்துக்கு உள்ளாவர்;␢ அனைத்துத் தெய்வங்களே!␢ அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.⁾
Alleluia
உரோமையர் 8:15
15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.
Gospel
மத்தேயு 6:7-15
7மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
8நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
9ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:⁽‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,␢ உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!⁾
10⁽உமது ஆட்சி வருக!␢ உமது திருவுளம் விண்ணுலகில்␢ நிறைவேறுவதுபோல␢ மண்ணுலகிலும் நிறைவேறுக!⁾
11⁽இன்று தேவையான உணவை*␢ எங்களுக்குத் தாரும்.⁾
12⁽எங்களுக்கு எதிராகக் குற்றம்␢ செய்தோரை நாங்கள்␢ மன்னித்துள்ளதுபோல␢ எங்கள் குற்றங்களை மன்னியும்.⁾
13⁽எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,␢ தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.␢ [‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும்␢ என்றென்றும் உமக்கே. ஆமென்.’]⁾
14மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
15மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.