வாசகங்கள்
9 ஜூன், 2027
Ordinary Weekday/ Ephrem of Syria, Deacon, Doctor
Ephrem of Syria, Deacon, Doctor
First Reading
2 கொரிந்தியர் 3: 4-11
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 99: 5, 6, 7, 8, 9
5⁽நம் கடவுளாகிய ஆண்டவரைப்␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது அரியணைமுன்␢ தாள் பணிந்து வணங்குங்கள்; § அவரே தூயவர்!⁾
6⁽மோசேயும் ஆரோனும்␢ அவர்தம் குருக்கள்;␢ அவரது பெயரால் மன்றாடுவோருள்␢ சாமுவேலும் ஒருவர்;␢ அவர்கள் ஆண்டவரை நோக்கி␢ மன்றாடினர்; அவரும்␢ அவர்களுக்குச் செவிசாய்த்தார்.⁾
7⁽மேகத் தூணிலிருந்து␢ அவர்களோடு பேசினார்;␢ அவர்கள் அவருடைய␢ ஒழுங்கு முறைகளையும்␢ அவர் அவர்களுக்குத் தந்த␢ நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.⁾
8⁽எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்;␢ மன்னிக்கும் கடவுளாக␢ உம்மை வெளிப்படுத்தினீர்;␢ ஆயினும், அவர்களுடைய␢ தீச்செயல்களுக்காய்␢ நீர் அவர்களைத் தண்டித்தீர்.⁾
9⁽நம் கடவுளாகிய ஆண்டவரைப்␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது திருமலையில்␢ அவரைத் தொழுங்கள்.␢ ஏனெனில், நம் கடவுளாகிய␢ ஆண்டவரே தூயவர்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 25: 4b, 5a
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
Gospel
மத்தேயு 5: 17-19
17திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
18‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது’ என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.