வாசகங்கள்
18 ஜூன், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
2 கொரிந்தியர் 11: 18, 21-30
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 34: 2-3, 4-5, 6-7
2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾
3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾
4⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾
5⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾
6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾
7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾
Alleluia
மத்தேயு 5: 3
3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾
Gospel
மத்தேயு 6: 19-23
19“மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
20ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
21உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”
22“கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
23அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்!”