வாசகங்கள்
8 ஜூன், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
2 கொரிந்தியர் 1: 18-22
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119: 129, 130, 131, 132, 133, 135
129⁽உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;␢ ஆகவே, நான் அவற்றைக்␢ கடைப்பிடித்து வருகின்றேன்.⁾
130⁽உம் சொற்களைப்பற்றிய விளக்கம்␢ ஒளி தருகின்றது;␢ அது பேதைகளுக்கு␢ நுண்ணறிவு ஊட்டுகிறது.⁾
131⁽வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்;␢ பெருமூச்சு விடுகின்றேன்;␢ ஏனெனில், உம் கட்டளைகளுக்காக␢ ஏங்குகின்றேன்.⁾
132⁽உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு␢ நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல்,␢ என் பக்கம் திரும்பி␢ எனக்கும் இரங்கும்!⁾
133⁽உமது வாக்கில் என் காலடிகளை␢ நிலைப்படுத்தும்!␢ தீயது எதுவும் என்னை␢ மேற்கொள்ளவிடாதேயும்!⁾
135⁽உம் ஊழியன்மீது உமது முகஒளி␢ வீசச் செய்யும்!␢ உம் விதிமுறைகளை எனக்குக்␢ கற்பித்தருளும்.⁾
Alleluia
மத்தேயு 5: 16
16இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
Gospel
மத்தேயு 5: 13-16
13நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
14நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
15எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
16இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.