வாசகங்கள்
6 ஜூன், 2027
Tenth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 3: 9-15
9ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
10“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
11“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
12அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
13ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
14⁽ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், § “நீ இவ்வாறு செய்ததால்,␢ கால்நடைகள், காட்டுவிலங்குகள்␢ அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.␢ உன் வயிற்றினால் ஊர்ந்து␢ உன் வாழ்நாள் எல்லாம்␢ புழுதியைத் தின்பாய்.⁾
15⁽உனக்கும் பெண்ணுக்கும், § உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்␢ பகையை உண்டாக்குவேன்.␢ அவள் வித்து உன் தலையைக்␢ காயப்படுத்தும்.␢ நீ அதன் குதிங்காலைக்␢ காயப்படுத்துவாய்” என்றார்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 130: 1-2, 3-4, 5-6, 7-8
1⁽ஆண்டவரே! ஆழ்ந்த␢ துயரத்தில் இருக்கும் நான்␢ உம்மை நோக்கி␢ மன்றாடுகிறேன்;⁾
2⁽ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் விண்ணப்பக் குரலை␢ உம்முடைய செவிகள்␢ கவனத்துடன் கேட்கட்டும்.⁾
3⁽ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை␢ மனத்தில் கொண்டிருந்தால்,␢ யார்தான் நிலைத்து நிற்க முடியும்?⁾
4⁽நீரோ மன்னிப்பு அளிப்பவர்;␢ மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.⁾
5⁽ஆண்டவருக்காக ஆவலுடன் நான்␢ காத்திருக்கின்றேன்;␢ என் நெஞ்சம் காத்திருக்கின்றது;␢ அவரது சொற்களுக்காக␢ ஆவலுடன் காத்திருக்கின்றேன்.⁾
6⁽விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ என் நெஞ்சம் என் தலைவருக்காய்␢ ஆவலுடன் காத்திருக்கின்றது.⁾
7⁽இஸ்ரயேலே!␢ ஆண்டவரையே நம்பியிரு;␢ பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;␢ மிகுதியான மீட்பு␢ அவரிடமே உண்டு.⁾
8⁽எல்லாத் தீவினைகளினின்றும்␢ இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!⁾
Second Reading
2 கொரிந்தியர் 4: 13 - 5:1
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
யோவான் 12: 31b-32
31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
32நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.
Gospel
மாற்கு 3: 20-35
20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
22மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
23ஆகவே, அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
24தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.
25தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.
26சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.
27முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
28❮28-29❯உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால், மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.”
29Same as above
30“இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.
33அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு,
34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
35கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.