வாசகங்கள்
28 ஜூன், 2027
Irenaeus, Bishop, Martyr Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 18: 16-33
16அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.
17அப்பொழுது ஆண்டவர், “நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?
18ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.
19ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
20ஆதலால், ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.
21என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.⒫
22அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.
23ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
24ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
25தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.
26அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.
27அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்;
28ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.
29மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்,
30அப்பொழுது ஆபிரகாம்; “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.
31அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.
32அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.
33ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச்சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 103: 1b-2, 3-4, 8-9, 10-11
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾
2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾
3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾
4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் அருளும்␢ கொண்டவர்;␢ நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.⁾
9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾
10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾
11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾
Alleluia
திருப்பாடல்கள் 95: 8
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel
மத்தேயு 8: 18-22
18இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
19அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.
20இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
21இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்” என்றார்.
22இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.