வாசகங்கள்
2 ஜூன், 2027
Ordinary Weekday/ Marcellinus and Peter, Martyrs
Marcellinus and Peter, Martyrs
First Reading
தோபித்து 3: 1-11a, 16-17a
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 25: 2-3, 4-5ab, 6 and 7bc, 8-9
2⁽என் கடவுளே,␢ உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;␢ நான் வெட்கமுற விடாதேயும்;␢ என் பகைவர் என்னைக் கண்டு␢ நகைக்க விடாதேயும்.⁾
3⁽உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்␢ வெட்கமுறுவதில்லை;␢ காரணமின்றித் துரோகம் செய்பவரோ␢ வெட்கத்திற்கு உள்ளாவர்.⁾
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
6⁽ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,␢ உமது பேரன்பையும் நினைந்தருளும்;␢ ஏனெனில், அவை␢ தொடக்கமுதல் உள்ளவையே.⁾
7⁽என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,␢ என் குற்றங்களையும் நினையாதேயும்,␢ உமது பேரன்பிற்கேற்ப␢ என்னை நினைத்தருளும்;␢ ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.⁾
8⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾
9⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾
Alleluia
யோவான் 11: 25a, 26
25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
Gospel
மாற்கு 12: 18-27
18உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,
19“போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.
20சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
21இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
22ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
23அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.
24அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
25இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
26இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? ⁽‘ஆபிரகாமின் கடவுள், § ஈசாக்கின் கடவுள், § யாக்கோபின் கடவுள் நானே’⁾ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே!
27அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.